அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 22 தேதி முதல் 31 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் மாலை 4 மணிக்கு கொடிப்பவனியும் 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில் செட்டிச்சார்விளை அருட்பணி பிருத்திவ் தாமஸ் மறையுரையோடு நடந்தது. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்தது. 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி கப்பியறை அருட்பணி ஆன்றனி ஜெயபாலன், மாடத்தட்டுவிளை இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலை இரவு நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு மூத்தோர் மற்றும் நோயாளர்க்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி களியக்காவிளை அருட்பணி சிரில், வெள்ளையம்பலம் அருட்பணி ஜஸ்டின் கிறிஸ்துராஜ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலை இரவு இசை நிகழ்ச்சி நடக்கிறது. 4 ம் நாள் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி மாத்திரவிளை வட்டார முதல்வர் பேரருட்பணி பிளாரன்ஸ், புத்தன்கடை அருட்பணி பெர்டின் அனஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்வு நடனம் நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி அப்பட்டுவிளை புனித யோசேப்பு – அருட்பணி சேவியர் புரூஸ், முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நாஞ்சில் நாட்டு நடனப் போட்டிகள் நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி பனவிளை அருட்பணி ஸ்டார்வின் சிரில், செம்பருத்திவிளை அருட்பணி லிபின் ராஜ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்வுகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஈஞ்சக்கோடு அருட்பணி வேனிஷ் மைக்கிள் ராஜ், உயர்கல்வி அருட்பணி அலோசியஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்வு நடக்கிறது. 8 ம் நாள் விழாவான 29 ம் தேதி காலை 7.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மதியம் 12 மணிக்கு அன்பு விருந்தும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆலன்விளை அருட்பணி மரிய வின்சென்ட், மாங்குழி அருட்பணி சகாய ஜெரால்டு எபின் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இளைஞர் இயக்க கலை நிகழ்வுகள் நடக்கிறது. 9 ம் திருவிழாவான 30 ம் தேதி காலை 8.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி வட இந்தியா அருட்பணி ஜினோ ஜோனிஸ், கிறிஸ்துநகர் அருட்பணி ஆன்றனி ஜோஸ் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை புலியூர்குறிச்சி அருட்பணி யேசு ரெத்தினம் தலைமையில் முளகுமூடு அருட்பணி கில்பர்ட் லிங்சன் மறையுரையோடு நடக்கிறது. மண்ணின் மைந்தர் அருட்பணி ரபேல் இணைந்து செபிக்கிறார். இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு செபமாலை, புகழ்மாலை 9.30 மணிக்கு திருவிழா திருப்பலி கோட்டாறு மறைவட்ட முதல்வர் பேரருட்பணி ஆன்றனி சகாய ஆனந்த், மண்ணின் மைந்தர் அருட்பணி ரபேல் மறையுரையோடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தேர்ப்பவனி, 6 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவை, அருட்சகோதரி பிரிஜித், அருட்சகோதரி ஜாய் ஆலிஸ், பங்குத்தந்தை அருட்தந்தை ததேயுஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் சுஜி, துணை செயலாளர் லீமாறோஸ், பொருளாளர் மரிய செபஸ்தியான் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா
