செயற்கை நுண்ணறிவுடன் உலகப்போதை விழிப்புணர்வு சங்கமம்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுடன் (ஏ ஐ ) இணைந்து உலகப்போதை விழிப்புணர்வு உலகளாவிய டிஜிட்டல் சங்கமம் 2026 ஆற்றுப்படுத்துதல் பணியகம்  சார்பில் ஜூன் 25 ம் தேதி நாகர்கோவிலில் நடக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் புதிய முயற்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த போதை விழிப்புணவு பிரம்மாண்ட சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சி 2026 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாகர்கோவிலில் அமைந்து உள்ள ஆற்றுப்படுத்துதல் பணியகம் அருள்வாழ்வு இல்லம் பிஷப் கேம்பஸில்  நடைபெறுகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் ஆற்றுப்படுத்துதல் பணி மையத்தின் இயக்குனரும் போதை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்  ஒருங்கிணைப்பாளருமான அருட்பணி பிரான்சிஸ்  சேவியர் நெல்சன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது  திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணி கிரேஸ் குணபால் ஆராய்ச்சி , இயேசு சபை போதை நோய் நலப்பணி குழு பொறுப்பாளர் சகாய பிராங்கோ, குளச்சல் தூய காணிக்கை அன்னை அருட் சகோதரி புளோரா மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர். செயற்கை நுண்ணறிவு விழிப்புணர்வு நிகழ்வை ஏஐ திறன் பயிற்சியாளர் அருள் குமரேசன் வழி நடத்துகிறார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *