மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளையோர் இயக்க வெள்ளி விழாவையொட்டி உடல் உறுப்புதான பயிற்சி முகாம் நடந்தது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நல கூடத்தில் நடந்த பயிற்சிக்கு பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை வகித்தார். இளம் பெண்கள் இயக்கத்தினர் இறைவணக்கம் பாடினர். இளைஞர் இயக்க தலைவர் ஆகாஷ் வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் குமாரதாஸ் பயிற்சியை துவங்கி வைத்தார். ஏற்றக்கோடு பங்கு பணியாளர் அருட்பணி லியோ அலெக்ஸ் உடல் உறுப்பு தானம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்தார். முளகுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குனர் அருட்பணி அஜின் ஜோஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாடத்தட்டுவிளை இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் ஆசி உரை வழங்கினார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணபிரசாத், துயர்நிலை ஆலோசகர் வினோத்குமார் ஆகியோர் உடல் உறுப்பு தானம் குறித்து பயிற்சி வழங்கினர். முன்னாள் இளைஞர் இயக்க தலைவர் அருணோ சேவியர் நன்றி கூறினார். முன்னாள் செயலாளர் மற்றும் வழிகாட்டி ரெக்ஸ்லின், சுவாமிதாஸ், தற்போதைய வழிகாட்டிகள் பிரகாஷ்தாஸ், பீட்டர், ஓய்சிஎஸ் வழிகாட்டி ஷைனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.