கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அன்னாள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவினை உயர்த்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தினை எளிதில் கண்டறியும் விதமாக வாக்குச்சாவடி நிலைய முகப்பில் ஒவ்வொரு வண்ணத்திலும் வாக்குச்சாவடி மையத்தினை குறிப்பிட்டு, வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டதோடு, முகப்பில் இருந்து வாக்குச்சாவடி மையம் வரை அந்தந்த நிற வர்ணம் பூசப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் வாக்காளர்களின் வசதிக்கேற்ப நிழல் பந்தல், குடிநீர், கழிப்பறைகள், கைப்பேசி பாதுாப்பு பை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு பொருட்களுடன் கூடிய தனிப்பகுதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடிமையம் மற்றும் இளைஞர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
229 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 39-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 41-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 38-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 94-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 91-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 92-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும், 93-ல் இளைஞர் வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. 231 குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்திவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 261-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 260-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 259-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 245-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 242-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 243-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளவங்கோடு – குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 211-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 212-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 213-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது. 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொலையாவட்டம் புனித புனித அன்னாள் பதின்ம மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 175-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 177-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 178-ல் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்ஒருபகுதியாக 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொலையாவட்டம் புனித புனித அன்னாள் பதின்ம மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலையம் 175-ல் பெண்கள் வாக்குச்சாவடி மையமும், 177-ல் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையமும், 178-ல் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கோமதி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
