கடிதம் எழுதும் போட்டி 2024

Share others

அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2024

உலகளாவிய தபால் ஒன்றியத்தின் சார்பாக அகில உலக அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 9 முதல் – 15 வயது வரை உள்ள இளம் வயதினர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான கடிதத்தை, 150 வருடங்களாக, உலகளாவிய தபால் ஒன்றியம் எட்டு தலைமுறைகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதன்பிறகு உலகம் மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்து உள்ளது. எதிர்கால தலைமுறைக்கு நீ எதிர்பார்க்கும் அவர்கள் வாழ்வதற்கான உலகம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் கடித வடிவில் எழுத வேண்டும். போட்டிகள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக நடத்தப்பட்டு கடிதங்கள் கோட்ட கண்காணிப்பாளர்,
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம், நாகர்கோவில் 629001 என்கிற முகவரிக்கு கிடைக்கப்பெற வேண்டிய கடைசி நாள் 15.3.2024. இப்போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000, இரண்டாம் பரிசு ரூ. 10000- மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000- வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000-, இரண்டாம் பரிசு ரூ. 25000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000 வழங்கப்படும்.

இப்போட்டி தொடர்பான இதர விதிமுறைகள் மற்றும் விவரங்களுக்கு 8667869023,9894774410 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கன்னியாகுமரி கோட்டம்
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *