கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள பொருட்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ள மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், வருகை பதிவேடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள பொருட்களான வாக்காளர் பெயர் பட்டியல், முகவர்களின் கையேடு, ஸ்டிக்கர், உள்ளிட்டவை போதுமானதாக உள்ளனாவா என்பதையும் அலவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மண்டல அலுவலர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, குறிப்பிட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று அந்த இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்வது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பது குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வாகன ஒத்துகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சாந்தி, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.