
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பொது அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் – மாபெரும் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் 6-வது புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கி வைத்து, பேசுகையில்:-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நிதியுதவியுடன் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் 19.2.2025 முதல் வருகின்ற 1.3.2025 வரை புத்தக கண்காட்சியில் பொது அறிவு, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது, வரலாற்று புத்தகங்கள், இலக்கியங்கள், கவிதை, நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் சுமார் 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அறிவு சாரந்த பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு வாசிப்பு பழக்கம் என்பது மிகச்சிறப்பாக இருக்கும். ஏனென்றால் காலையில் ஆரம்பித்து இரவு வரை அதாவது 6 மணி நேரத்தை தவிர மற்ற நேரம் முழுவதும் புத்தகங்களை வாசித்து படித்தால் தான் வெற்றி பெற முடியும். எனக்கு மிகவும் பிடித்தவர் வாரன் பபெட். உலகின் மிகப்பெரிய பணக்கார பட்டியலில் இடம்பெற்று உள்ளார். அவர்கள் வாரத்திற்கு மூன்று புத்தகங்களை வாசிப்பார். அவரகள் இப்போது நான் தொழிலதிபராக இருக்க காரணம் புத்தக வாசிப்பு தான் என்று கூறுகிறார். அடுத்து பில்கேட்ஸ் அவர்களும் தொடர்ந்து வாசிப்பு பழக்கம் உள்ளவர். அடுத்தப்படியாக எலென்மஸ்க் ஒரு பொறியாளர் அவர்கள் ராக்கெட் தொடர்பான புத்தகங்களை வாங்கி படிப்பார்களாம். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் வாசிப்பதை பழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும் சரித்திரம் படைத்த தலைவர்கள், உலக தொழில் முனைவோர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகப்பெரிய அளவில் புத்தகங்களை வாசிக்கின்றவர்களாக இருந்ததால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நாம் அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழகத்தினை மறந்து வருகின்றோம். இந்த புத்தக கண்காட்சி வாயிலாக உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிப்பது ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவுசார்ந்த புத்தகங்களை வாசிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
. நம்முடைய குறிக்கோளுக்கு சரியான புத்தகத்தினை தேர்ந்தெடுத்து படிக்கும் போது தான் நாம் நினைத்ததை அடைய முடியும். நமது இளைய தலைமுறையினர் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே புத்தகம் வாசிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் இதுபோன்ற புத்தக கண்காட்சியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வருகை தந்து புத்தக அரங்குகளை பார்வையிடுவது மட்டுமல்லாமல் அதிகளவில் புத்தகங்களையும் வாங்கி செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா,, உதவி ஆட்சியியர் பயிற்சி சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, துணை ஆட்சியர் பயிற்சி பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட நூலக அலுவலர் மேரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல்முருகன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம் (நிதியியல்), தாஜ் நிஷா (குற்றவியல்), வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), சஜித் (கல்குளம்), ஜீலியன் (விளவங்கோடு),பொதுமக்கள; கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.