கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வாட்ஸ்புரம் சத்துணவு மையத்திலும் , 27ஆம் தேதி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையிலும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 21ஆம் தேதி மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 22 ஆம் தேதி லட்சுமிபுரம் சத்துணவு மையத்திலும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 11ம் தேதி சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 14 ஆம் தேதி கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குருந்தகோடு ஊராட்சி ஒன்றியத்தில் 8 ம் தேதி பன்னி கோடு அரசு துணை சுகாதார நிலையத்திலும், 25 ஆம் தேதி சரல் அரசு துணை சுகாதார நிலையத்திலும், தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 15ஆம் தேதி பள்ளியாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 25 ஆம் தேதி திருவிதாங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 14ஆம் தேதி மிடாலம் அரசு துணை சுகாதார நிலையத்திலும், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் 21ஆம் தேதி கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஒரு நூறாம் வயல் அரசு துணை சுகாதார நிலையத்திலும், 18ஆம் தேதி பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் 11ஆம் தேதி தூத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 25 ஆம் தேதி முஞ்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் அனைத்து கண்புரை நோயாளிகளையும் அரசு வாகனத்தில் இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே கண்புரை நோயாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்த நவீனக் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்புரை நோயுற்றோர் அனைவரும் பார்வை அடைந்து உள்ளனர் என்ற நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.