கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆறுதல்

Share others

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் தவறி விழுந்த இரண்டு மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்த பீட்டர் ஜான்சன் அவர்களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (4.6.2025) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தெரிவிக்கையில் –
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையம் அருகில் வசித்து வந்தவர் பீட்டர் ஜான்சன் என்பவர் தினமும் குழித்துறை தடுப்பணையில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். கடந்த 1.6.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியில் இருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகிய இருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட திரு.பீட்டர் ஜான்சன் இரண்டு மாணவர்களின் உயிரையும் காப்பாற்றிய நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் இந்த சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாணவர்களையும் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்து உள்ள பீட்டர் ஜான்சன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவி உடனடியாக அன்னாரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *