சித்தன்தோப்பு தூய அலங்கார அன்னை ஆலய திருவிழா

Share others

கன்னியாகுமரி மாவட்டம் சித்தன்தோப்பு புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி துவங்கி 20 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி நடந்தது மாலையில் செபமாலை, புகழ்மாலை தொடர்ந்து திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருள்பணி இயேசுரெத்தினம் தலைமையில் அமராவதிவிளை பங்குத்தந்தை அருள்பணி ஆன்றனி ஜெயக்கொடி அருளுரையோடு நடந்தது. அன்பிய ஒருங்கிணையம் வழிபாட்டை சிறப்பித்தனர். இரவில் ஆண்டு விழா பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 2 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி இதயபுரம் பங்குத்தந்தை அருள்பணி லிபின் ராஜ் தலைமையில் வர்த்தான்விளை பங்குத்தந்தை அருள்பணி ஸ்டார்வின் சிறில் ஷாஜன் அருளுரையோடு நடக்கிறது. கோல்பிங் இயக்கம், கிராம முன்னேற்ற சங்கம், அடித்தள முழு வளர்ச்சி சங்கம் வழிபாடு சிறப்பிக்கின்றனர். 3 ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருப்பலி இறச்சகுளம் அமைதியகம் அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி தலைமையில் நடக்கிறது. மறைக்கல்வி மன்றம், பாலர் சபை, சிறுவழி இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் வழிபாடு சிறப்பிக்கின்றனர். 9 மணிக்கு நற்கருணை ஆராதனை, மாலை 5 மணிக்கு நற்கருணை ஆசீர், 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கப்படுகிறது. ஆற்றூர் பங்குத் தந்த அருள்பணி வெலிங்டன் தலைமையில் ஆலன்விளை பங்குத்தந்தை அருள் பணி ஜாண் விபின் அருளுரையோடு நடக்கிறது. புனித வின்சென்ட் தே பவுல் சபை, கிறிஸ்தவ வாழ்வு சமூகம் வழிபாடு சிறப்பிக்கின்றனர். 5 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு சுதந்திர தின விளையாட்டு போட்டிகளும் மாலை 6:30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழிவிளை பங்குத்தந்தை அருள்பணி தாமஸ் குருசப்பன் தலைமையில் கல்லுக்கூட்டம் பங்குத்தந்தை அருள்பணி சுனில் அருளுரையோடு நடக்கிறது. கண்டன்விளை, இரணியல், பண்டாரவிளை இறை மக்கள் வழிபாடு சிறப்பிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது

. 6 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை திருப்பலி கோட்டாறு வட்டார முதல்வர் அருள் பணி சகாய ஆனந்த் தலைமையில் வளனூர் பங்குத்தந்தை அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் அருளுரையோடு நடக்கிறது. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் வழிபாடு சிறப்பிக்கின்றனர். இரவு 8:30 மணிக்கு ஆண்டு விழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகளும் 9 மணிக்கு யோகா ஜிம்னாஸ்டிக் சகாச நிகழ்ச்சியும் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை புகழ்மாலை திருப்பலி வெள்ளமடம் பங்குத்தந்தை அருள்பணி பேட்ரிக் சேவியர் தலைமையில் கொல்வேல் பங்குத்தந்தை அருள்பணி ஓய்சிலின் சேவியர் அருளுரையோடு நடக்கிறது. இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம், கத்தோலிக்க சங்கம், பெண்கள் பணிக்குழு, மரியாயின் சேனை வழிபாடு சிறப்பிக்கின்றனர். 8 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி காரங்காடு பங்குத்தந்தை அருள்பணி விக்டர் தலைமையில் அப்பட்டுவிளை சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்பணி மைக்கேல் அலோசியஸ் அருளுரையோடு நடக்கிறது. கத்தோலிக்க சேவா சங்கம் வழிபாடு சிறப்பிக்கின்றனர். இரவு 8:30 மணிக்கு ஆண்டு விழா பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு முதல் திரு விருந்து திருப்பலி வேங்கோடு வட்டார முதல்வர் அருள் பணி பெஞ்சமின் தலைமையில் நடக்கிறது. முதல் திருவிருந்து பெறும் குழந்தைகள், பெற்றோர், ஞானப் பெற்றோர் வழிபாடு சிறப்பிக்கின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி திருத்துவபுரம் பேராலய பங்குத்தந்தை அருள்பணி பீட்டர் தலைமையில் செம்பருத்திவிளை பங்குத்தந்தை அருள்பணி ராபர்ட் ஜாண் கென்னடி அருளுரையோடு நடக்கிறது. தொடர்ந்து திருத்தேர் இருப்பிடம் மற்றும் திருத்தேர் அர்ச்சிப்பை மண்ணின் மைந்தர் அருள்பணி மரியதாசன் செய்து வைக்கிறார். அருள்பணி பீட்டர், அருள்பணி தாமஸ் குருசப்பன், அருள்பணி ராபர்ட் ஜாண் கென்னடி, மண்ணின் மைந்தர்கள் முன்னிலை வகிக்கின்றனர். பங்கில் இருந்து திருமணமாகி சென்ற பெண்கள் வழிபாடு சிறப்பிக்கின்றனர். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், வானவேடிக்கை நடக்கிறது.

/ 10 ம் நாள் விழாவான ஆகஸ்ட் 20 ம் தேதி காலை 7.30 மணிக்கு குடும்ப விழா நினைவு திருப்பலி அகமதாபாத் மறைமாவட்டம் மேதகு ஆயர் அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமையில் நடக்கிறது. பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் வழிபாடு சிறப்பிக்கின்றனர். மதியம் 3 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில் மாலை 6 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருள்பணி பேரவையினர், பங்குத்தந்தை அருள்பணி சகாய ஜஸ்டஸ், இணைபங்குத்தந்தை அருள்பணி ஏசுதாஸ், அருள்பணி பேரவை துணைத்தலைவர் இருதய தாசன், செயலாளர் சகாயடெல்பின், துணை செயலாளர் ராபர்ட்சிங், பொருளாளர் ஜீஜின் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *