சிறப்பு கல்வி கடன் முகாம்

Share others

சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் பள்ளி கலையரங்கத்தில்  வருகின்ற 15.2.2024 (வியாழக்கிழமை)  அன்று காலை 10 மணி முதல்  மாலை 5  மணி வரை நடைபெற உள்ளது.
எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in  என்ற இணையத்தளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள்.

மேலும், மாணவ/ மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம்,  வங்கி ஜாயின்ட் அக்கவுண்ட் பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட போனபைட்  சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர்      ஆஷா  அஜித் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *