ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் பட்டா கேட்டு வந்த ஊனமுற்ற மாணவர் பெபித் என்பவர் பத்மனாபுரம் சார் ஆட்சியர் கௌசிக்யிடம் படிக்க வேண்டும் என்று கூறியதால் தக்கலை ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர்த்திடவும் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்திட நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சென்று மாணவரிடம் கற்றல் குறித்து சார் ஆட்சியர் கௌசிக் கேட்டறிந்தார். உடன் பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.