கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள கூட்டுவிளை பகுதியில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருடைய மனைவி சுனிதா மற்றும் மகன்கள் சத்தியா அபினாஷ், சத்தியா அபிஷேக் ஆகிய இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். சுனிதா குமார் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சமையல் பணிக்கு சென்று வருகிறார். வழக்கம் போல் சம்பவத்தன்று பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை சுமார் 11.30 மணியளவில் வீட்டின் மேல் பகுதியில் இருந்து புகை மூட்டம் வெளியே வருவதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்து கொண்டு வீட்டை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது வீட்டில் உள்ள பிரிட்ஜ்சில் இருந்து மளமளவென தீ பற்றி ஏறிந்து புகை மூட்டம் வெளியாகி உள்ளது. இதை அறிந்த அருகில் உள்ள சிமெண்ட் கடை நடத்தி வரும் செல்லப்பழம் தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு பணியாளர்கள் சீனிவாசன், ஜார்ஜ் ஜெகத், சகாய ஜோஸ், சுந்தர் ராஜன் ஆகியோர் தீயணைப்பு வாகனத்தோடு விரைந்து வந்து தீயை அணைத்து எரிந்த நிலையில் உள்ள பிரிட்ஜ்யை அப்புறப்படுத்தினர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் தீ ஏரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் தக்க சமயத்தில் வந்து தீயை அணைத்ததால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.