பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திய 47 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்கவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுபவர்களை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நடந்த சோதனைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்தி கொண்டிருந்த 47 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை வரும் நாட்களில் தீவிர படுத்தப்படும்.
47 பேர்கள் மீது வழக்கு பதிவு கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி
